2020

 

  கொரோனா மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இந்த ஆண்டு பிறந்த குழந்தைகள் நடந்த திருமணங்கள் எல்லாமே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்திருக்கும்.எல்லாமே ஒரு கண்ணுக்கு தெரியாத கிருமியினால் மாறிவிட்டது.இதோ டிசம்பர் மாதமும் வந்தாச்சு.

   முகமூடிகள் அணிந்து சுற்றிய நம்மை முகக்கவசத்துடன் சுற்ற வைத்தது.பிரமாண்டங்கள் எல்லாம் எங்கே போயின என்றே தெரியவில்லை.நீ நல்லா இருக்கியா நான் நல்லா இருக்கேன்னு விசு பாணி விசாரணைகள்.கை குலுக்கல் நின்று இரு கை கூப்பி வணக்கம் சொல்லி. 

   இயற்கை என்ன சொல்ல வருகிறது என்று இன்று வரை தெரியவில்லை .கொரோனா இருக்கா இல்லையா என்று கூட தெரியாமல் தான் இருக்கிறோம்.தகரத்தட்டிகள் இப்போ மறைந்து விட்டன.இயற்கைப்பேரழிவுகள் எத்தனையோ வந்தும் நாம் மாறவில்லை. இன்று வெகுசில மாற்றங்களை பார்க்க முடிகிறது.ரோட்டில் யாரும் அவ்வளவா எச்சில் துப்புறதில்லை.இன்னைக்கு சந்தோஷமா இருந்தா போதும் பொய் சொல்றது தெரிந்தாலும் சரி சரி விடுங்க என்றும் போக முடிகிறது.அரசியல் கழிவுகள் பற்றி பேச விரும்பவில்லை.

    மாணவர்கள் வகுப்பில் செய்த தொந்தரவு ஆன்லைனில் இல்லை.ஆனால் பயனிருக்கிறதா என்றும் தெரியவில்லை.எனக்கு கலாம் ஐயா சொன்னது தான் கரும்பலகையில் எழுதுவது போல் வராது ‌என்ன technology வளர்த்தாலும்.

   ஜோஸியங்கள் 2020பற்றி கணித்தது பொய்த்ததால் ஒழிந்து விடும் என்று நினைச்சேன் ஆனா அது ஒரு பக்கம் நடந்துட்டுதான் இருக்கு. 2021 எட்டிப்பார்க்குது என்ன சொல்லலாம் 

‌    புத்தாண்டே நீயாவது எங்களை நல்லா பாத்துக்கோ போதும் போதும் னு ஆயிடுச்சு.முடியல 😃😃😃🙏🙏

Comments

  1. அருமையான கருத்து, அழகான வடிவமைப்பு. Indeed, waiting for 2020 to end and hoping for a bright 2021!

    ReplyDelete
  2. உண்மையில் கொரோனா என்னையும் சேர்த்து பலரின் வாழ்வினை புரட்டி போட்டு விட்டது. கொரோனாவின் கோரத்தை எளிதில் கடந்துஸபோகமுடியாது... அதன் தாக்கம் பல நாள் நீடிக்கும்.. தடுப்பு மருந்து கிடைக்கும் வரை காத்திராமல் ஓரளவு சராசரி திரும்புகிறது...மற்றபடி உங்களின் இந்நல்லபதிவில் பிடித்த வாக்கியம் ",பிரமாண்டங்கள் மாயாமாகிவிட்டது"..

    ReplyDelete
  3. மிகவும் சரி . சாதாரணமாக கடந்து போக முடியவில்லை.நெருங்கிய உறவினர்கள் கொரோனாவால் பட்ட கஷ்டங்கள் மறப்பது கடினம்

    ReplyDelete
  4. Ur write up skills with a knowledge of day today events is highly appreciable. Keep on

    ReplyDelete
  5. 2021 also going as 2020, not as 2020, going worsening then 2020. Atleast we will expect 2022 a good year

    ReplyDelete
  6. Very true Praying for the good in the coming days 🙏

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கனவுகள்

இடமா படமா

இயற்கை