Lockdown 2019
என்ன பாக்குறீங்க 2020க்கு பதிலா 19னு போட்டுட்டேன் னா.இல்லீங்க 19தான் என்ன தலகீழா மாத்திச்சு.ஆமா திடீர்னு மார்பகப் புற்றுநோய் னு மருத்துவர் சொ ல்ல மூஞ்சி தொங்கிபோச்சு எ னக்கு. படிச்சவங்க தானே எப்படி ஏமாந்தீங்கனு கேள் வி. அழுதேன்.90%இது வெ ற்றி வா ய்ப்பு. 10%ல நான் இருந்தா குறுக்கு புத்தி எனக் கு இல்லல்லயோசிக்க வேணா ம். பாப்போம்னு பயிற்சி மருத்துவரா இருந்த என் மகனுக்கு சொன்னே ன்.இருமா வர்றே ன்.ஒற்றைப்பதில்.வந்தபின்ன சொன் னது.இதெல்லாம் ஒண்ணும் இல்லமா என்ன ஒ ரு ஏழு மாச ம் கஷ்டப்படணும்.அவ்ளோதான்.அம்பது வயசு ல இதப் பொறுத்துக்க மாட்டியா னு கேட்டான். அடுத்த இரண்டு நாட்கள் எல்லா டெஸ்டும் எடுத்து biopsy காக வெய்ட் பண்ணி ஆபரேஷனுக்கு தேதி குறிச்சாங்க.எல்லோரும் அழுகை ஆனால் நான் திடமாக இருந்தேன்.யாரையுமே பாக்கலை என் வலி என் வலிமைனு.psychiatrist வந்தார் கள்.நாளைக்கு இந்நேரம் நீங்க கேன்ஸர் ஃப்ரீ.அப்புறம் கீமோ கொஞ்சம் கஷ்டம்னு நான் சிரித்தேன் தெரியும் முடி போய்டும் தோல் கருப்பாயி...