Lockdown 2019

 

     என்ன பாக்குறீங்க 2020க்கு பதிலா 19னு போட்டுட்டேன் னா.இல்லீங்க 19தான் என்ன தலகீழா மாத்திச்சு.ஆமா திடீர்னு மார்பகப் புற்றுநோய் னு மருத்துவர் சொல்ல மூஞ்சி தொங்கிபோச்சு னக்கு. படிச்சவங்க

தானே எப்படி ஏமாந்தீங்கனுகேள்வி.

அழுதேன்.90%இது வெற்றிவாய்ப்பு.

10%ல நான் இருந்தா குறுக்கு புத்தி எனக்குஇல்லல்லயோசிக்க வேணாம்.

பாப்போம்னு பயிற்சி மருத்துவரா இருந்த என் மகனுக்கு சொன்னேன்.இருமா வர்றேன்.ஒற்றைப்பதில்.வந்தபின்ன சொன்னது.இதெல்லாம்ஒண்ணும்

இல்லமா என்ன ரு ஏழு மாசம் கஷ்டப்படணும்.அவ்ளோதான்.அம்பது வயசுல இதப் பொறுத்துக்க மாட்டியா னு கேட்டான். 

    அடுத்த இரண்டு நாட்கள் எல்லா டெஸ்டும் எடுத்து biopsy காக வெய்ட் பண்ணி ஆபரேஷனுக்கு தேதி குறிச்சாங்க.எல்லோரும் அழுகை ஆனால் நான் திடமாக இருந்தேன்.யாரையுமே பாக்கலை என் வலி என் வலிமைனு.psychiatrist வந்தார் கள்.நாளைக்கு இந்நேரம் நீங்க கேன்ஸர் ஃப்ரீ.அப்புறம் கீமோ கொஞ்சம் கஷ்டம்னு நான் சிரித்தேன் தெரியும் முடி போய்டும் தோல் கருப்பாயிடும் ஆனால் எல்லாமே திரும்பிடும் ஆறுதல் ஆனால் அவர் கண்களில் கொஞ்சம் பாவம்..ம்ம் அந்த முகத்தை யும் பார்ப்போமே.
ஆபரேஷன் முடிந்து ஒரு பையை மாட்டி விட்டாங்க நீர் வடிகட்ட 22 நாளைக்கு அப்புறம் முதல் கீமோ என் பையன் சொன்னது hang over மாதிரி தாம்மா சமாளிச்சுக்கோ ஆனால் கட்டிடமே தலைகீழாக.கடவுளே தண்ணி அடிக்கறவன் இதுக்கா இப்படி அலயறானானு தோணுச்சு.ரெண்டாவது நாள் potassium குறைஞ்சு seizures வந்து ஆம்புலன்சில் உய் உய் சத்தத்துடன் போய் ரெண்டு நாள் ICUஇதுவரை என்ன நடந்தது னு சொல்ல மாட்டேன் றாங்க.வாயெல்லாம் புண் தண்ணீர் குடிக்க கூட முடியல இதுல உறவுக்காரங்க இத சாப்டு அது சாப்டுனு.அப்போதான் கமலி அத்தை 76,வயது அவர் சொன்னார் உனக்கு என்ன பிடிக்குதோ அத சாப்பிடு 70வயசு கிழவி நான் சமாளிச்சுண்டு ஆறு வருஷமாறது நோக்கென்ன என்று தூண்டுசக்தி.அப்புறம் உறவுகள் பாவமா பாக்கறது பாவம் செஞ்சிருப்பாளோன்னு பாக்கறது ரொம்ப அழுகை வந்தது.பையன் சொன்னான் பிடிக்கலையா no சொல்லுமா . சொன்னேன்.ஏதாவது hobbies  எதுவுமே பண்ண பிடிக்கல.college group watsapp ல‌தான் முழுவதும்.எல்லோருமே men than எங்கூட படிச்சவஙக.மூணே பொண்ணுங்க.என்ன பத்தி தெரிஞ்சவங்க கொஞ்சம் பேர்.மத்தவங்களுக்கு தெரியாது.அது எனக்கு பிடிச்சது.என் மகன்தான் தலைய shave செஞ்சான்.அழகாத்தானே இருக்கு னு.ஆனா போகப்போக கண் புருவங்களும் இமைகளும் போக மனசு வெறுத்தது.கண்ணாடியே பார்க்காத நான் தினமும் பத்து வேளை பார்த்தேன்.அப்புறம் என் முகத்தை நானே அன்பு கொண்டு என் கன்னத்தை பிடித்து முத்தம் கொடுத்தேன்.இதில் என் கணவர் பங்கு மிக முக்கியம்.கடமை சரியா செஞ்சார்.மிகவும் உருகவில்லை கண்டுக்காமலும் இல்லை. positive vibes அவரிடம் இருந்து எனக்கு மட்டுமல்ல.ஆஸ்பத்திரியில் இருந்த‌ மற்ற நோயாளிகளுக்கும் பரப்பினார்.எனக்கு மட்டும் சமைக்க ஆரம்பித்தேன்.முடிஞ்ச அளவுக்கு சாப்பிட்டேன்.அப்புறம் radiation treatment.தினமும் ஒரு மாதத்திற்கு முதல் நாள் மனக்கஸ்டம் அழுதேன்.என் நிலைமை நினைத்து.பையன் சொன்னது அழறியே நாளைக்கு போ மாட்டியா போவே இல்ல அப்புறம் என்ன என்று.இதுவும் இல்லை எதுவும் கடந்து போகும்.
இப்போ சமைக்கறேன் சாப்பிடறேன் தூங்கறேன் lockdown எனக்கு எதார்த்தமாக இருக்கிறது.

       இதை மே2020 ல எழுதுனேன் சரி போடலாம் னு இதோ போட்டாச்சு.

Comments

Popular posts from this blog

கனவுகள்

இடமா படமா

இயற்கை