நண்பர்கள் கூட்டம்

 

   சும்மா ஒரு கதை தோணுச்சு.கதயோட ஒன்றி அப்டியே காட்சிக்குள்ள போறது உங்க பொறுப்பு.

 காக்கி பேண்ட் வெள்ளை சட்டையோட பசங்க ப்ளூ பாவாடை வெள்ள சட்டையோட கொஞ்சம் பொண்ணுங்க.

 எட்டாம் வகுப்பு ஆ பிரிவு னு வெச்சுக்குவோம்.நல்ல நண்பர்கள் அனைவரும் கேலி கிண்டல் இருந்தாலும் ஒருவர் மேல் ஒருவர் உண்மையான அக்கறை.இதில் நண்பன் ர எல்லோருக்கும் நல்ல பழக்கம்.உயிர்நண்பர்கள் மூன்று பேர் செ ரா மற்றும்  ர.

 பக்கத்து வகுப்பு மாணவன் ப நம்ம எல்லாம் ஒரே வகுப்பு தானே ஒன்றா இருக்கலாம் எனக்கூப்பிட சரி இருக்கலாம் னு கொஞ்ச நாள் கூட்டு சேர்ந்தோம்.ஆனா அங்க ஒரே கும்மாளம் இங்க பிடிக்கல புகஞ்சிட்டே இருக்க நண்பன் ர கீதை பத்தி சொல்ல மதத்த பத்தி பேசாதனு சொல்லிட்டு அங்க மொக்கையா பஜன போட்ட பொண்ணுக்கு ஆஹா ஓஹோ என்று விடாம கை தட்ட எரிச்சல் ஆயிட்டு உயரமான சா அங்கே போய் கொளுத்தி போட துடுக்கு பொண்ணு நு நேரா அங்க போய் என்னது இது ஓவரா scene அப்டீனு நாலு வார்த்தை கேட்டுட்டு தனியா போய் நின்னுட்டா. நண்பன் ர கு ஏற்கெனவே செம கடுப்பு கீதை நான் சொன்னா தப்பு பஜன மட்டும் சரியானு வெளியே வந்தாச்சு .எதையுமே நிதானமா பண்ற கொஞ்சம் குண்டு பையன் தி மன்னிக்கவும் உடனே வெளியே வந்தாச்சு.உயரமான பொண்ணு உ பயங்கர நிதானம் ஆனா உடனே வெளியேறி இந்த கூட்டத்தில் வந்துட்டா.உயிர் நண்பன் செ இன்னும் அங்கேயே நிக்க  ர ஏண்டா வரலனு கேக்க இருடா அவன் வண்டவாளத்த தண்டவாளத்தில் ஏத்திட்டு வர்றேன்னு ப காதில் என்னமோ சொல்ல அவனே போயிடு கெட்ட கோபம் வரும்னு சொல்ல செ விசிலடிச்சிட்டே இங்கே வந்தாச்சு.

       நண்பர் க எப்போ எப்போ னு ஓடி வந்தாச்சு இதே போல நண்பர் திண்டுக்கல்லும் ஏதேதோ யோசித்து தனியே வந்தாச்சு.இப்போ வர்றாரு நம்ம ராகி ஏதோ வேலை முடிச்சிட்டு வந்து பார்த்தா தனியா ஒரு க்ரூப் நிக்குது தன்னோட நண்பர்கள் மட்டும்.அப்டியே ஒரு நிமிட யோசிச்சிட்டு ஓடி வந்து நீங்க இங்க இருக்கும்போது எனக்கு அங்கு என்னடா வேலை னு சொல்ல எல்லோரும் சேர்ந்து கை தட்டி சிரிக்க கண்கள் பனித்தது.

யாரையாவது விட்டிருந்தா சொல்லுங்க சேத்துடலாம்.

😄😄😄😄😄😄🙏🙏

Comments

Popular posts from this blog

கனவுகள்

இடமா படமா

இயற்கை