மூக்கு


    மத்தவங்க விஷயத்தில மூக்க நுழைக்காத இது ரொம்ப முக்கியமான விஷயம்.இந்த கட்டுரை கொஞ்சம் பெரிய மூக்கு இருக்கறத பத்தி பெருமையா சொல்றதால சின்ன மூக்கு இருக்கிறவங்க படிக்காதீங்க சும்மா ஒரு ஜாலிக்குதான் மத்தபடி ஒண்ணுமில்லை .என்னைக்கு உருப்படியா எழுதறேன்னு கேக்கறீங்களா.😰

   சரி விஷயத்துக்கு வருவோம்.எனக்கு பெரிய மூக்கு இருக்கறது கொஞ்சம் பெருமை நானா நினைச்சிக்கிட்டேன் பெரிய மூக்கு இருக்கிறவங்க அறிவாளிங்கனு😃 சின்ன வயசுல இந்திராகாந்தி மூக்கு னு எனக்கு சொல்லும்போது ஆஹா. அண்ணாக்கும் எனக்கும் ஒரே மாதிரி மூக்கு அவரோட பசங்க ரெண்டு பேரும் அதே.

        Cooptex ல தீபாவளிக்கு வாங்கிட்டு form fill பண்ணும்போது பின்னாடி நின்னவங்க city corporation school sheik Mohammed தங்கச்சியா நீங்கனு கேட்டாங்க ஆச்சரியமா எப்படி கண்டுபிடிச்சீங்கனு கேட்டேன் மூக்கு வெச்சு தான் னு அசால்ட்டா சொன்னாங்க🙃

        சின்ன வயசுல சப்பையாதான் இருந்தது எப்படி மாறுச்சுன்னே தெரியல.எங்க பெரியப்பா மகன் எப்ப என்ன பாத்தாலும் மூக்கு பிடிச்சு இழுப்பார்.பெரியவளானதும் நான் இழுத்து தான் உன் மூக்கு நீளமாச்சுனு எப்பவும் சொல்லுவார்   .எங்க பாட்டி மூக்கும் எங்கப்பா மூக்கும் கலந்து எனக்கு வந்துடுச்சு. யார பாத்தாலும் எனக்கு அவங்க மூக்கு பாக்கறது பழக்கம் ஆயிடுச்சு ‌.பெரிய மூக்கு ஆளுங்கள பார்த்தா நம்ம இனம் னு தோணும்.இவ்ளோ மூக்கு பத்தி சொல்றேனே என் husband மூக்கு எதிலயும் சேர்க்க முடியாது.சப்பையுமில்ல பெரிசுமில்ல என்னன்னா சண்டைல அவர் தம்பி பக்கெட் வீசி அடிபட்டு வெட்டுதான் இருக்கு.

      என் கல்யாண photos இப்போ பாக்கும் போது மூக்கு மட்டும் பெருசா தெரியறது நல்லாவே இல்லை.ஆனா ஒண்ணு மட்டும் தெரியுது எல்லோரும் இதப்படிக்கும்போதே கண்ணாடில மூக்க பாக்குறீங்க தானே.

     😄😄😄😄

Comments

  1. சரளமாகவும் சுவாரஸ்யமாகவும் எழுத ஆரம்பித்து விட்டீர்கள்.. புன்னகை யுடன் படித்து முடித்தேன். நல்ல பதிவு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நன்றி.புன்னகை வந்ததா success😊🙏

      Delete

Post a Comment

Popular posts from this blog

கனவுகள்

இடமா படமா

இயற்கை