அப்பாவின் சைக்கிள்

          அப்பா நல்ல உயரம் ஆறடி பக்கத்தில் இப்போ எல்லாம் ஆறடி சர்வசாதாரணமாக இருக்கிறார்கள்.அப்பா Hercules cycle special ஆ order பண்ணி வாங்கினார் அவர் உசரத்துக்கு ஏத்தபடி .அதில் கணீரென்ற bell , Dynamo light . அப்பா அதை ஓட்டினா செம கெத்தா இருக்கும்.

           நான் எப்பவும் முன்னாடி handle barல் தான் உக்காரு வேன். உக்கார ஏதுவாக அப்பா ரெண்டு டவல் போடுவார்.என்னை உக்கார வெச்சி திருப்பி திருப்பி கேப்பாங்க உக்கார முடியுதாம்மா இல்லனா இன்னொரு டவல் போடட்டானு . என் ரெண்டு காலையும் எடுத்து முன்னாடி Xshapeல போட்டு இப்போ ஓகேவா என்று சொல்லி விட்டு அவர் ஓட்ட ஆரம்பிக்கும் போது வர்ற பெருமை இருக்கே.அவரோட ரெண்டு கைகளுக்கு நடுவே பத்திரமா இருக்கும் உணர்வு இப்பவும் .கொஞ்ச தூரம் போனதும் ஆளுங்க இருக்காங்களோ இல்லையோ பெல் அடிக்க ஆரம்பிச்சுடுவேன் கொஞ்ச நேரத்தில் விரல் வலிக்கும் அப்பா என் விரலை கொஞ்சம் நகர்த்தி நான் சொல்லும் போது எல்லாம் பெல் அடிப்பார்.

           அப்பா retired ஆற வரைக்கும் அதுதான் எங்கள் வாகனம். நான் கார் வாங்கணும் னு அடம் பிடிக்க ஆரம்பிச்சேன்.second hand standard car வாங்கி வந்தார்.அதப்பத்தி இன்னொரு நாள் பார்ப்போம்.ஆமா நான் எதுக்கு திடீர்னு இத எழுதறேன்னா போன வாரம் hospital checkup போயிருந்தேன்.ரத்தம் எடுக்கறப்போ இந்த தடவை பையன் இருந்தான் அவன் கை spanner பிடிச்ச கை போல சொன்னாலும் கேக்காம கைய பிடிச்சு முறுக்கி தட்டி ஊசியை போட்டு ரெண்டு கையையும் குடஞ்சு ஒரு வழியா ரத்தம் எடுத்தான்.ஏனோ பக்கத்தில் அப்பாவின் முகம் வேதனையோடு பார்ப்பது போல ஒரு உணர்வு .

            

Comments

  1. அப்பாவின் அன்பு எப்போதும் நம் கூடவே, சந்தோசமோ இல்லை வருத்தமோ.

    ReplyDelete
  2. Yes true ஈடு இணையற்ற அன்பு.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கனவுகள்

இடமா படமா

இயற்கை