மதங்களைத்தாண்டி

      வசீமோட friendக்கு கல்யாணம்.அவங்கஅம்மா நேத்து கல்யாண பத்திரிகை குடுக்கும் போது மூணு வருஷத்துக்கு முன்னாடி நீங்க குடுத்த மெக்கா தண்ணீர் பாட்டிலும் கங்கா தீர்த்தத்தையும் சாமி படத்துக்கு முன்ன வெச்சிருக்கேங்க னு சொன்னதும் 

        என் நண்பன் morning wishes கூட முகமது ஷமி  செத்துப்போவேனே தவிர நாட்டுக்கு துரோகம் செய்ய மாட்டேன் னு சொன்னதை சேத்து அனுப்பியதும் அடப்போங்கடா நீங்களும் உங்க மதத்துவேஷங்களும் எங்கள ஒரு டேஷும் பண்ண முடியாதுனு சொல்லத்தான் இந்த பதிவு.

         நான் இன்னைக்கு வாழறேன்னா உறவுகள் தொழுகைகளுடன் நண்பர்கள் கிறிஸ்து ஆலயங்களில் ஒலித்த ப்ரார்த்தனைகளும் கோயில்களில் காட்டிய தீபாராதனைகளும்தான். இங்க ரம்ஜான் பிரியாணி தீபாவளி தித்திப்பு மட்டும் பரிமாற்றம் இல்லை.இது உணர்வுகளின் பரிமாற்றம். இது இந்தியா நாங்க இந்தியர்கள்.வேணும்னா பாரத்னு மாத்தலாம் எங்கள மாத்தமுடியாது இது காலம் காலமா வேர் பரந்து விரிந்து உசுரு இருக்கறவரை இருக்கும். I Love My India.

Comments

Popular posts from this blog

கனவுகள்

இடமா படமா

இயற்கை