கனவுகள்
மேகாலயா மிக நீண்ட கால கனவு பலமுறை முயன்று போக முடியாமல் சண்டையில் முடிஞ்சிருக்கு.அப்புறமா எனக்கு உடம்பு சரியில்லாம போக அப்படியே மறந்தே போச்சு.இந்த பொங்கல்ல திரும்பவும் மேகாலயா ஞாபகம் அவர் நண்பர் குடும்பம் என் நண்பர் குடும்பம் யாரும் வரலன்னு சொல்லவும் கொஞ்சம் தூர நண்பர் கேட்டவுடன் சரின்னு சொல்ல கடகடன்னு flight ticket எல்லாம் போட்டு இவருக்கு தெரிஞ்ச forest dept நண்பர்கள் guidance வெச்சு அங்கே permission வாங்கி roomலாம் போட்டாச்சு.
ரெண்டு பேருக்கும் செம fever அதயும் மீறி 14 ஆம்தேதி கிளம்பினா வானிலை காரணமா flight ரெண்டு மணி நேர late இரவு பன்னெண்டு மணிக்கு Guwahati போய் சேந்து airport விட்டு வெளியே வந்து ஊருக்கு உள்ள போகப் போக ஒண்ணுமே நல்லாவேஇல்ல ஒரே புழுதி இதுக்கா இவ்ளோ ஆசைப்பட்டாய் பாலகுமாரினு வெளியே சொல்ல முடியல.
காலைல கிளம்பி Shillong க்கு பயணம் வழியெல்லாம் நம்ம கோட்டயம் போலவே அங்கே umiam lake போனோம் speed boatல ஏறினோம் அப்படியே மாறிட்டேன்.ஆஹா ஆஹா I love India 😍அப்புறம் khasi dress போட்டு photoshoot எடுத்துட்டு அங்கிருந்து கிளம்பி Don Bosco museum ஒரு air walk மேலே மேலே மேலே Shillong city view பாத்துட்டு roomபோய் நல்லா தூக்கம் குளிர்ல.
Next day Dawki river போகும் வழியெல்லாம் அழகு பங்களாதேஷ் பார்டர் . என்ன வளம் இல்லை திருநாட்டில் நம்ம நாடு நாடுதாங்க அங்கே khasi costume மாதிரி போட்டு கிட்டு அலப்பறை.சுத்தி சுத்தி கண்கொள்ளா காட்சி கனவா இல்லை நிஜமா. greenish blue crystal clear river .
அடுத்த நாள் நேரா சிரபுஞ்சி இப்போ சொஹ்ரா elephant falls மூணு அருவி இறங்கிலாம் போக முடியாது ஆனா கண்ணுக்கு அழகு அப்புறமா மாபெரும் மலைகள் பணிவை கற்றுக்கொடுத்தால் குகைகள் நிமிராதே திமிராக என்று. ஒவ்வொரு இடமும் தனித்தனி அழகு குகைகளுக்கு உள்ளே இவ்வளவு ப்ரமாண்டங்களா எனக்கு தெரிந்த பிரமாண்டம் கடல் மட்டுமே . Garden of caves குகைகளை என்ன சொல்ல பதினோரு இடங்கள் ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு விதம் . மூங்கில் குச்சி ஊணி ஊணி எல்லா இடத்திலும் என் கால்களை பதிச்சிட்டேன்.😃mawsmai caves குகைக்கு உள்ளே தலை இல்லை முதுகு கூட நிமிராதே மண்டைலேயே அடிப்பேனென்று கருகருவென பாறைகள் நடுவில் வளைந்து நெளிந்து தவழ்ந்து ஒவ்வொரு இடமும் நான் என்னால் எப்படி முடிந்தது ஆச்சரியம். வெளியே வரவே மனமில்லாமல். Double decker Live root bridge ஏறி இறங்க முடியாது ன்னு single root bridge போனோம் .ஏறி படுத்துக்கட்டேன்😃அவ்ளோ சில்லுனு அங்கே நாங்க நாலு பேர் மட்டுமே. அப்புறம் arwah caves அது அவ்வளவா என்னை ஈர்க்கல .
அப்புறமா போனது laitlum canyons மலைகளும் பள்ளத்தாக்குகளும் அழகோ அழகு .நீ எவ்ளோ மேல போனாலும் அடுத்த நொடி அதல பாதாளம் னு🥵. குதிரை சவாரி வேற பண்ணேன் சின்ன குதிரை னு பார்த்தா செம sensitive நடுங்கிப் போய் பாதியில் இறங்கிட்டேன்.
காலையில் இருந்து மாலை வரை Kaziranga forest மலைப்பயணம் போனவுடன் அங்கே வழியில் ஒற்றை கொம்பன் the great Rhino. இரவில் கலாச்சார நடனங்கள் அவ்ளோ அழகா பெண்களும் அவங்க உடைகளும் ரெண்டு பொண்ணுங்க ரொம்ப அழகா ஆடுனாங்க ஆடி முடிச்சவுடன்ஒரு பொண்ணு வீட்டுக்கு போன் பண்ணுது வேகமா குழந்தை இருக்குமோ .என் கடந்த காலம் ஞாபகம் வந்தது college time முடிஞ்சா பையன் ஞாபகம் வந்துடும் எனக்கு .
அடுத்த நாள் காலைல அஞ்சரை மணிக்கு யானை மேல சவாரி ஒற்றை கொம்பனை பார்க்க .இங்கே மட்டும் தான் நேரான சவாரியாம் நான் ராணி போல feel பண்ணேன் 😂
காட்டுக்குள் அங்கே அங்கே நேரா ஒண்ணும் திருப்பி நின்னு ஒண்ணும் இரட்டையர்கள் சண்டையும் நடுநடுவே மான்கள் சூரிய உதயம் னு இப்போ சொல்றேன் இதற்கு தானே ஆசைப் பட்டாய் பாலகுமாரீஈஈ.
மறுநாள் ப்ரம்மபுத்ரா நதியில் படகில் சின்னபெங்காலி பொண்ணு என்கிட்ட ஒட்டி கிச்சு என்னை அணைச்சு பாசம் பொழியுது தனக்கு english ம் பெங்காலியும்தான் பேசத் தெரியும் னு சொல்ல அவங்க அப்பா தப்பா எடுத்துக்க கூடாது அவளுக்கு ரொம்ப புடிச்சு போச்சு னா இப்படி செய்வான்னார் positive vibes u have mam nu சொல்ல சிரிப்பு வந்தது 😍 அப்புறமா நதி மேல்Rope car ல் அந்த ஊர் மக்களுடன் பயணம் மறுபடியும் I love India .
ஒண்ணு சொல்ல மறந்துவிட்டேன் சாப்பிட vegetarian food அருமை மத்தபடி சிக்கன் மட்டும் ஓகே. மிக சாந்தமான மக்கள் சின்ன சின்ன உருவங்கள் சின்ன சின்ன கடைகள் அதில் வியாபாரம் போதும் என்று வாழ்க்கை னு சிரிச்சிட்டே இருக்கற முகங்கள் எங்க cab driver மிக அருமையான driver sema prompt.நல்ல வேளை பான்பராக் சாப்பிடலை Shillong.ஊர் சுத்தம் கௌஹாத்தி நிறைய குப்பை.எட்டு நாள் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள்.இயற்கை மாபெரும் சக்தி அதற்கு எப்போ பிடிக்குதோ அங்கே நம்மள வரவெச்சு அழகு பார்க்குது .Finally I love India 💕.
Really wonderful write up
ReplyDeleteThank you
Deleteஎனக்கும் ரொம்ப நாள் ஆசை தான் மேகலயா போலாம் என்று
Deleteகண்டிப்பா போங்க அது ஒரு தனி உலகம்.நான் படங்கள் போறதில்லை ஏன்னா நேர் ல பாக்கணும் அதனால் தான்.
Deleteஆஹா அருமை.. 💞என்ன வளம் இல்லை நம் தாய் நாட்டில் 💞.இந்த பயணத்தில் வர முடியாத நண்பர் குடும்பம் நாங்கள் என்பதில் மிகவும் வருத்தம்.. Unfortunately we really missed the opportunity.
ReplyDeleteநன்றி
Deleteஇந்தியாவ முதல் ல சுத்தி பாப்போம் வாங்க.நன்றி
Deleteஇந்த பயணத்தில் வர முடியாத நண்பர் குடும்பம் நாங்கள் என்பதில் Engalukum varutham. Meendum orumurai Poivaruvom namathu Tholarkaludan.
ReplyDeleteஇயற்கை கண்டிப்பா தனக்கு பிடிச்ச ஆட்களை வரவெச்சு அழகு பார்க்கும் 🙏
ReplyDeleteGift of Nature. ; Is surprisingly generous and rich. And its gifts are not only clean air and sun, but also the surrounding plants, vegetables, fruits, which saturates the body with valuable nutrients necessary for a full and healthy life, give strength and improve mood. Travel .. Travel ., it's way of life. To explore. ,relax. live happily.
ReplyDeletetravel destination in 2025, beating Azerbaijan's capital, Baku! 🌍✨ According to Skyscanner's latest Travel Trends Report, it's the only Indian city on the list, loved for its perfect blend of adventure, relaxation, and breathtaking natural beauty.2 days ago
ReplyDelete