கடல்

      சென்னை வந்ததுலேருந்து எனக்கு கடல் மேல் விருப்பம் குறைஞ்சுடுச்சு ஏன்னு தெரியல.எதுவுமே கிடைக்கும் வரைதான் போல.நேத்து அவரோட நண்பர் பையன் கல்யாணம் பாண்டிச்சேரி ல Google பண்ணி பாத்தா paradise beach blue flag beach Edan beach னு இருந்தது.சரி நானும் வர்றேன் னு கிளம்பி காலைல beach போனா ஆடி அமாவாசை னு எல்லாம் ஒரே பூ பழம் னு கடற்கரையே குப்பை.இது போதாதுனு ஒருத்தர் எல்லார் முன்னாலயும் உக்கார்ந்து போயிட்டு இருக்கார் . அவர் இஷ்டம் அது. நான் நொந்து போய் husband கிட்ட  எனக்கு இப்பல்லாம் கடல பாக்கவே பிடிக்கவில்லை னு வருத்தமா சொன்னேன்.

            கடல் மாதாக்கு கேட்டுருச்சு போல ஆஹா நம்மளுக்கு புடிச்ச ஒருத்தி இப்படி பேசுறாளேனு யோசிச்சு மேகம் கூட discuss பண்ணியிருக்கு.சாயந்தரமா கோவளம் beach போலாமானு கேட்டதுக்கு நான் அவ்ளோ விருப்பம் இல்லாம சரி னு சொன்னேன் சொல்லிட்டு மேல பாத்தா ரெண்டு குட்டி மேகம் குண்டு குண்டா இருந்துச்சு அப்படியே கொஞ்ச நேரத்தில் வர்ண ஜாலம் காட்ட ஆரம்பிச்சு வானவில் போல மேகம் முழுசும் கலர் கலரா ஆஹா ஆஹா னு படம் எடுக்க ஆரம்பிச்சேன்.அந்த junction லேருந்து ரெண்டு கிலோமீட்டர் ல கோவளம்.

             கடற்கரையில் இறங்கி பாத்தா வானம் இருட்டி கண்ணுல கண்ணீர் முட்டிட்டு இருக்கற மாதிரி மேகங்கள் மழையோடு கடலை தொட்டும் தொடாமலும் கடல் கலரே கருநீலமாய் இதுவரை பார்த்திராத அழகில் என்னை பிடிக்கலயானு கேட்பது போல இருந்தது .எப்பவுமே ஆர்ப்பரிக்கும் அலைகள் அமைதியா என் கிட்ட வந்து வந்து போனது சின்ன வயசுல நம்ம friends கிட்ட சண்டை போட்டா பேசலாமா வேணாமா னு யோசிப்போம்ல அது போல. மழை பெய்ஞ்சதுன்னா நாம நனையலாம் போகக்கூடாது னு உக்காந்துட்டே இருந்தேன்.ஆனா  நான் போயிடக்கூடாதுன்னு மழை வரல.

        கொஞ்ச நேரத்தில கல்மேல நின்னு போட்டோஸ் எடுத்துட்டு கிளம்பி வந்தா சென்னை முழுசா செம மழ வந்து விட்டு இருந்துச்சு.மனுஷங்க தான் பொய்யா இருக்காங்க முகமூடிகளோட சுத்தறாங்க.வெறுக்கறாங்க பிடிக்காம பழகறாங்க‌.ஆனா இயற்கை அப்படி இல்லை னு முடிக்க மனசு வரல.ஏன்னா வயநாடுல கோர தாண்டவம் ஆடிடுச்சு.ஏன்னே தெரியல.சில கேள்விகளுக்கு இங்கே பதில் கிடைக்கிறது இல்லை.

x

Comments

Post a Comment

Popular posts from this blog

கனவுகள்

இடமா படமா

முடி திருத்தம்