கோகிலா

         கோகிலா இந்த பெயரிட்டு கிட்டத்தட்ட அஞ்சு மாசமாயிடுச்சு ஆனா என்னவோ எழுதவே இல்லை.இப்போ திடீர்னு தோணுது சரி எழுதலாமா .February ல மலேஷியா போயிருந்தோம்.

        எல்லோருக்கும் தெரியும் அந்த நாட்டோட சுத்தம் அப்புறமா ஒரு சாராயக் கடை இல்லை. இரவு நேரங்களில் கூட தனியா நடக்கலாம். ரோடு ரோடா நடந்தோம் நடந்து நடந்து வியந்தோம்

  நான் வியந்து போனது என்னன்னா அங்கே cab ல book பண்ணி போனா ரொம்ப சௌகரியம்.நாங்க போன cab எல்லாம் 95% muslim ladies தான் ஓட்டுறாங்க.புர்கா போடறதில்லை ஆனா தளர்வான full hand shirt and pants தலையில் scarf அவ்ளோதான்.பயமே இல்லாமல் ராத்திரி பத்து மணிக்கு கூட இங்கு pickup drop வர்றாங்க.நிறைய பேருக்கு நான்கு குழந்தைகள் சாதாரணமாக.அப்புறம் வயச கேட்டா அறுபதுக்கும் மேல் பேரன் பேத்தி எடுத்தவங்களும் இருந்தாங்க.

       கோகிலா யார் னு கேக்கறீங்களா அவங்களும் ஒரு cab driver தான்.காலைல லங்காவி போக ferryல போறதுக்கு ரொம்ப தூரம் போக வேண்டும் அதனால் cab book பண்ணினோம் வந்தவரிடம் எண்ற ஊட்டுக்காரர் good morning சொல்ல அவங்க பேர் அப்புறம் முகமும் தமிழ் நீங்க தமிழானு கேக்க ஆம் நீங்க தமிழ்ல வணக்கம் சொல்லியிருக்கலாமே னு கேட்டாங்க.அப்புறமா அவங்க கதை கேட்டோம் எங்கள் ஊர் எம் அப்பன் சிவனப்பன் கோயில் உள்ள ஊர் ஆகும்.அதைத்தவிர அவருக்கு வேறு அடையாளம் தெரியவில்லை.தாத்தா அங்கே வேலைக்கு வந்ததாகவும் அங்கேயே தங்கி விட்டார் என்றும் சொன்னார்.நாங்களாக தஞ்சாவூர் போல என்று சொல்லிக் கொண்டோம்.

          எத்தனை வருஷமா கார் ஓட்டறீங்க என்று கேட்டேன்.நாலு வருஷமா அதுக்கு முன்னாடி restaurant வெச்சு இருந்தோம்.பெரிய வெள்ளத்தால் வீடு முதற்கொண்டு எல்லாமே அடிச்சுட்டு போயிட்டு என்று சாதாரணமாக சொன்னார் எனக்கு அந்த நேரம் எப்படி இருந்து இருக்கும் என்று கற்பனை கூட செய்ய முடியல அப்புறமா driving கத்துக்கிட்டேன் இப்போ இதான் காப்பாத்துது.அவர் முகத்தில் ஒரு அமைதியான புன்னகை.நாங்களும் ஒன்றும் பேசவில்லை. எனக்கு மூன்று பெண்கள் பெரியவள் காலேஜ் அடுத்தவள் பள்ளி இறுதி வகுப்பில் மூன்றாமவர் எட்டாவது உங்களை இறக்கி விட்டு அவர்கள் ஒவ்வொரு வரையும் கொண்டு விடணும் என்றார்.

         பெண்களின் உறுதி எவ்வளவு சீக்கிரம் துயரத்தில் இருந்து விடுபட்டு அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி விடுகிறது.ஆனாலும் நிறைய கோபம் இருக்கு இயற்கையின் மீதும் கடவுளின் மீதும் 😡😡

Comments

Popular posts from this blog

ஈத் முபாரக்

முடி திருத்தம்

ஆச்சரியம் ஆனால் உண்மை