படம் பார்க்கலாமா

        போன ரெண்டு வாரத்துல மூணு படம் பார்த்தேன்.எனக்கு theatre போக பிடிக்கறதில்லை.வீட்டுல ஒரு படம் மூணு ஏன் நாலு நாள் கூட ஆகும் பாத்து முடிக்க.இந்த தடவை பத்து நாள்ல மூணு படம் leading role எல்லாமே பெண்கள்.

பாலன்,

சின்ன சின்ன ஆசை ,

ஏக் தின் ஹிந்தி.

எல்லாமே .

          ஏக் தின் பத்தி சொல்லணும்.சாய்பல்லவியோட முதல் ஹிந்தி படம்.நானும் இதுதான் அந்த பொண்ணோட முதல் படத்தை பாக்குறேன். பின்றாப்பா அந்த பொண்ணு அழகான ஆழ்மனச தொடற படம்.இப்படி ஒரு காதல் கதை அருமை.

           பாலன் என்னமா நடிச்சு இல்லை வாழ்ந்து இருக்காங்க அம்மா பையன் ரெண்டு பேரும்.மலையாளப்படம் அந்த இயற்கையின் அழகு மனிதர்களின் இயல்பான நடிப்பு நம்மள ஒன்றிட செய்து பின் வெளியே வரும்போது மனசுல பாரம்.

            சின்ன சின்ன ஆசை ல எனக்கு மதுபாலா ஏனோ ஒத்துக்கவே முடியல நிறைய தடவை நிறுத்தி நிறுத்தி பார்த்தேன்.ஆனா கடைசி நிமிடங்கள் யதார்த்தமா மனச பாதிக்கிற அளவுக்கு ரெண்டு பேரோட நடிப்பு.

          மூன்று படங்கள் லயும் சினிமாத் தனம் அங்கே அங்கே இருந்தாலும் ரொம்ப திருப்தியா இருந்துச்சு.

          இப்போ நூறு சாமி ரெண்டாவது நாளாக தொடருது அது உண்மை கதையாம் .இதிலயும் பெண் ரோல் தான் முக்கியமா இருக்கு.பார்ப்போம் எப்படி முடிகிறது னு.

Comments

Popular posts from this blog

ஈத் முபாரக்

முடி திருத்தம்

தந்தையர் தினம்