மனசு

                   June லயே check up போக வேண்டியது.போன ரெண்டு தடவையும் reports அவ்வளவா திருப்தி இல்லை என்னை வைத்து scan எடுக்க ஒரு Dr team ஏ ஆராய்ந்து கடைசியில் senior Dr வந்து அவர்களுக்கு explain பண்ணி report தந்தார்கள். Final ஆ Dr Guhan அவரும் மாத்திரை வேற குடுத்து இருக்கேன் அடுத்த தடவை பாக்கலாம்னு சொன்னார்.Decemberல போனா அப்பவும் ஒண்ணும் சொல்லலை ஆறு மாசம் கழிச்சு வாங்க எப்போதும் நல்லா இருக்குமா என்பவர் ஏன் இப்படி சொல்றார் னு மனசுல கொஞ்சம் பயம் அதனால் இந்த தடவை தள்ளி போட்டுட்டு வந்தேன்.

       நேத்து போனா சரியான கூட்டம்.கடவுளே மனசுலயும் பதைபதைப்பு ரொம்ப நேரம் உக்காந்துட்டு இருந்தேன். அப்போ 85 வயசு மாமி நடக்க தடுமாற மற்ற பெண்கள் உடனே பிடித்துக் கொண்டார்கள்.அவர் பையன் அட என்ன என்று அவர் கன்னத்தில் தட்டி ஒண்ணும் இல்லை மா என்று சொல்ல மற்றவர்கள் ஆமாம்மா நாங்க எல்லாம் அப்படித்தான் பயப்படாதீங்க னு ஆறுதல் கூற அந்த மாமி பயம் லாம் இல்லை மா இந்த வயசுல னுதான் கஷ்டமாக இருக்கு என்று அழுதது சங்கடப்படுத்தியது.மதங்கள் எல்லாம் மருத்துவமனைல ஒரு பொருட்டே இல்லை யாரா இருந்தாலும் கஷ்டப்படக்கூடாதுனு நினைப்பது மட்டுமே அங்கே வேதம்.

         எவ்ளோ தான் மனசுல சமாதானம் சொல்லிக்கிட்டாலும் Dr என்ன சொல்வாரோனு பதட்டம் இருக்கு.Reports பாத்துட்டு நல்லா இருக்கீங்க மாத்திரை ய continue பண்ணுங்க னு அந்த ஒற்றை வார்த்தை கேக்குற வரை .

          உடம்புக்கு எதுவும் வரக்கூடாது.வந்தா தாங்கறதுக்கு மனதிடம் வேணும்.அப்போ அப்போ தோணும் என்ன பாவம் செஞ்சேன்னு தெரியலையே என்னவா இருந்தாலும் பெருந்தன்மையா மன்னிக்கணும் அதானே கடவுள்.இத மட்டும் என் பையன் கேட்டா பைத்தியமா நீ பிறந்த குழந்தை என்ன பாவம் பா பண்ணுச்சு அது கஷ்டப்படுது என்பான்.உடனே அவங்க அப்பா அம்மா னு நினைக்காதீங்க.இது எல்லாத்துக்கும் அப்பாற்பட்டது.

         சில சந்தேகங்கள் தீர்வதில்லை.

           

Comments

  1. Live ur life. No anxiety. Depression. Stress. No more hereafter. When God is with u. None can. !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கனவுகள்

முடி திருத்தம்

கடற்கரை