அனுபவம் புதுமை

           கொஞ்ச நாளா எதிலும் நாட்டமில்லை.நாட்டின் தலைவர்கள் மக்களிடையே நிறைய பிளவுகள ஏற்படுத்தி குளிர் காயராங்கனு மனசுல அப்புறம் தமிழ்நாட்டு அரசியல் யாரும் இங்கே யோக்கியன் இல்லை ஒரு நாட்டின் தலையெழுத்து கேலிக்கூத்தாகி விட்டது.

              சரி நம்ம விஷயம் என்னன்னா கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்கு முன்னாடி சில பல‌ இடங்களுக்கு போயிட்டு ரயில் விட்டு இறங்கும் போது மழையால் சகதி படில கால் வெச்சேனோ இல்லையோனு கூட தெரியல வழுக்கி வலது கால் ரயிலுக்கும் platform க்கும் நடுல போய் அல்லானு கத்திட்டு குப்புற விழுந்தேன்.

           அடுத்த நொடி ரயில் ல‌ நின்னுட்டு இருந்தவங்க சட்டுனு குதிச்சு ரெண்டு பக்க தோள் புடிச்சு இழுத்து மேல் உக்கார வெச்சுட்டாங்க.

          ஒரு அலறல் அது அல்லாவா முருகாவா இல்லை ஜீஸஸா எதையும் பாக்காம உதவி செஞ்சாங்க அவ்ளோதான்.எனக்கு கால் ஊன கூட முடியல கஷ்டப்பட்டு அங்கே நடந்து சேர்ல உக்கார்ந்து இருந்தேன்.

           ஒரு அம்மா பையன் ரயில் ஏற வந்தவங்க நின்னு அந்த அம்மா ஏதோ ointment குடுக்க அந்த பையன் எங்கே வலிக்குதுனு கேட்டு போட்டு விட்டு fracture இருக்கற மாதிரி தெரியவில்லை எதுக்கும் hospital போங்கன்னு சொல்லிட்டு போனார்.mbbs படிக்கறவரா கூட இருக்கலாம்.

   சோர்வாக இருந்த மனசுக்கு இது போதும்.எந்த சாமியும் நேரா வர்றதில்லை நம்ம மூலமாக தான் எல்லாம் நடக்குது.நீ பெரியவன் நான் பெரியவன் லாம் எதுவுமே இல்லை.ரயிலுக்கு உள்ள விழுந்து இருந்தேன்னா இப்போ இத எழுதி இருக்க முடியுமா என்ன 😃😃😃

Comments

Popular posts from this blog

ஈத் முபாரக்

முடி திருத்தம்

ஆச்சரியம் ஆனால் உண்மை