போராளி
நம்ம நாட்டு எல்லைல போராடற வீரனப்பத்தி சொல்லப்போறேன்னு பாக்கறீங்களா இல்லீங்க தன்னை நிரூபிக்கப்போராடும் பெண்களப்பத்திதாங்க சொல்லப் போறேன் . என்னதான் பெண்ணீயம் பேசினாலும் இந்த உலகம் கண்டிப்பா ஆண்சார்புநிலை உலகமாகத்தான் இருக்கு.நாம சாதிக்க ரொம்ப கஷ்டப்பட வேண்டியிருக்கு.நானும் போராட்டக்குணம் கொண்டவதான். படிக்கறதிலயும் வேலையிலயும் புகுந்த வீட்டிலயும் போராடித்தான் ஜெயிச்சிருக்கேன்.இதவிட காலம் தர்ற வேதனையை சாதனையா மாத்தறதுக்கு பாடுபடற ஒரு பொண்ணை சந்திச்சேன். என் தோழியோட தோழி அவர்.அவரப்பத்திதான் இங்கே சொல்லப்போறேன். விவசாயக்குடும்பம் தான். ஆனால் விவசாயம் செய்யறதில்ல ரெண்டு குழந்தைகள் மாமனார் மாமியார் ம் ஆமாம் கணவர் இல்ல விபத்துல இறந்துவிட்டார்.நாங்க அவங்க வீட்டுக்கு போனப்போ அவங்க வீட்டில் இல்லை.தேங்காய் நார் உரிக்கும் ஆலையில் இருந்து வேர்க்க விறுவிறுக்க வந்தாங்க.அவரைப்பார்த்ததும் தெரிஞ்சது நல்ல தைரியமான பொண்ணு னு.இல்லனா வேல வாங்க முடியாது எட்டு மணிக்கு போனா நைட்டு எட்டு மணிக்கு தான் வருவேங்க எல்லாம் automatic தான் ஆனால் நாம் நிக்கலே...