Posts

காசி விஸ்வநாதர்

        இன்னைக்கு காலைல பெருந்துறை லேருந்து கார்ல நானும் அவரும் வந்தோம்.காலை நேரம் ங்கறதால நான் casual dress ல இருந்தேன்.செங்கம்பள்ளி toll gate ல ஒரு traffic constable bus க்காக எட்டி பாத்துட்டு இருந்தார். வீட்டில எங்க சார் போணும்னு கேட்க கோவை ல duty னு அவர் சொல்ல வாங்க போலாம்னு ஏறச் சொன்னார்.அவருக்கு அவ்வளவு சந்தோஷம் சார் நான் உக்கடம் போகணும் driving inspector first day late ஆயிடுச்சு னு நின்னுட்டு இருந்தேன்.ஏதோ போன ஜென்மத்தில் உங்க கூட இருந்திருப்பேன் போலன்னு பேசிட்டு வரும் போது காசி விஸ்வநாதர் கதை சொன்னார்.இந்த சூழல் ல அது அவ்வளவு அர்த்தமுள்ள சம்பவமாக தோணுது.       காசி விஸ்வநாதர் கோயில் ல பூஜைகள் மிக பலமா நடக்கறத பாத்த சாமிக்கு சந்தோஷம் பொங்க இன்னைக்கு நேரா ஊருக்குள் போயிட வேண்டியதுதான் னு பிச்சை எடுக்கற மாதிரி போக எல்லா இடங்களிலும் துரத்தப்படறார்.கடைசில ஒரு இடத்தில தொழுநோயாளி ஒருத்தர் நாலு நாய்ங்களுக்கு தான் பிச்சை எடுத்த சாப்பாட்டு வெச்சிட்டு தானும் சாப்பிடப் போகையில் நம்ம கடவுள் கைய நீட்டுறார்.அவரும் சிரிச்சிட்டே தன் சாப்பாட்டை அப்படியே அவருக்கு...

அர்ச்சுனா

Image
    மகாபாரதத்தில் கர்ணன் எவ்வளவு பிடிக்குமோ அதே அளவு பிடிச்ச character அர்ச்சுனா.என்னோட சின்ன  வயசுல இருந்து இப்பவரைக்கும் மறக்க முடியாத ஆள் பேரும் அர்ச்சுனாதான்.       மாட்டுப்பொங்கல் அன்னைக்கு கண்டிப்பா உன் ஞாபகம் வந்துடுது. எட்டு வயதிருக்கும் எனக்கு அர்ச்சுனா இங்க வா என்று கூப்பிட்டு தான் பழக்கம் வந்துட்டேன் சின்ன பாப்பா சொல்லிட்டே முன்னாடி நிக்க இது அர்ச்சுனா.கால் வலிக்கும் பாப்பா நான் தூக்கிக்கிறேன்னு என்னைத்தோளில் தூக்கி school கு கூட்டிப் போவார்.இப்போலாம் மூன்று வயது குழந்தை கூட ஆண்களிடம் தள்ளி இருக்க வேண்டிய நிர்ப்பந்தம்.            வா பாப்பா பால் கறக்க சொல்லிக்குடுக்கறேன்னு மாடு மடியை தொட வைத்தது.நெல்லிக்காய் மரத்தில் ஏற்றிவிட்டு காய்களை உலுக்கச்செய்தது ஆளுயர மீன்களை சுத்தம் செய்யும்போது அது என்ன இது என்னனு நான் கேக்கற கேள்விக்கெல்லாம் பதில் சொல்றது எல்லாமே அர்ச்சுனாதான்.அவருக்கு மூணு பசங்கனு ஞாபகம் என் வயசு இருக்கும் ஒரு பையனுக்கு.          ‌              ...

தேவனே

    சின்ன வயசுல இருந்தே ரொம்ப மனசு ஒடஞ்சு போகும் போது சோர்ந்து போகாதே மனமே கண்டுனை அழைத்த தேவன் கைவிடுவாரோ சோர்ந்து போகாதே என்று என்னை நானே தேத்துறது வழக்கம்.ஏனோ தெரியல யேசுவின் கருணை முகம் ரொம்ப பிடிக்கும்.ஒரு கவலையான முகம் அவரோடது கண்கள் கவலையும் கருணையும் கலந்து இருக்கும்.ரெண்டு நாள்ல அவர் பிறக்கிறார் எல்லா பண்டிகைகளும் Happy னு சொன்னா Christmas மட்டும் merry Christmas மிகவும் அழகான வார்த்தை.        Merry diwali ,merry Ramzan illa only merry Christmas ⛄🌲. கிறிஸ்துவிற்கு பின் 2021 ஆண்டுகள் முடிந்து 2022 ஆரம்பிக்கிறது பாப்போம் நல்லவிதமாக.

இடதுகை

Image
     ரொம்ப நாளா எழுதணும்னு நினைக்கிறது ஆனா ஏனோ ஆர்வம் குறைந்து விட்டது.இன்று கையெழுத்து போடும் போது தான் இடதுகையை எதேச்சையா கவனிச்சேன்.ரெண்டு வருஷத்துக்கு முன்ன எத்தனை எத்தனை ஊசிகள் அத்தனையும் இடதுகை தாங்கிச்சே அதுவரைக்கும் இந்த கைக்கு அவ்ளோ முக்கியத்துவம் கொடுத்தது இல்லை.அப்போ அப்போ வாட்ச் கட்டியிருந்ததால மணி பார்ப்பேன்.ஆனா இப்போ விரல் நரம்புகளக்கூட விடாம குத்தி குத்தி .நிறமெல்லாம் மாறி  வாட்ச் காட்டுனா கைல பலமில்லாம தூக்கக்கூட முடியாது.புற்று நோய விட அதற்குண்டான treatment ஆள் நிலைகுலைய செஞ்சுடுது.ஆனா நீயா நானா னு ஒரு கை பாத்துட்டதால இன்னைக்கு மறுபடியும் கம்பீரமாக வாட்சோட வலம் வரலாம்.         

மகளிர் தினத்தில்

      மகளிர் தினத்தில் யாரைப் பற்றி எழுதலாம் னு யோசிச்சப்போ பாட்டியின் ஞாபகம் வந்தது . அப்பாவின் அம்மா சர்வர்பீபீ.எனக்கு அஞ்சு வயசு இருக்கும் போதே போயிட்டார்.அப்போ அவருக்கு வயசு 87. அம்மா சொல்லி கேள்வி ஞானம் தான்.மாமியார் பற்றி குறைகள் இருந்தாலும் அவர் தைரியத்தை சொல்லி எங்களை வளர்த்தார் அம்மா.ஆஜானுபாகுவான உடல் கணீரென்ற குரல் யாருக்கும் எதற்கும் பயப்படாத பெண்மணி.அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் நான் வெள்ளைக்காரனையே செருப்பால் அடிச்ச ஏட்டோட பொண்ணு யாருக்கும் பயப்பட மாட்டேன் என்று.பழமொழிகள் ஆயிரம்.எழுதியிருந்தா புத்தகமா போட்டிருக்கலாம் என்று அம்மா அடிக்கடி சொல்லுவாங்க.       பாட்டியின் அண்ணன் ஏமாற்றி சொத்தெல்லாம் வாங்கி கொண்டதால் படிப்புதான் முக்கியம் என்று தன் பெண் குழந்தைகளை படிக்க வைத்தார்.அப்பா பத்தாவது குழந்தை பாட்டிக்கு.ஒரு சமயம் மனம் நொந்து தூக்கில் தொங்கப்போக மூன்று வயது என் அப்பா காலைக் கட்டிக் கொண்டு அண்ணாங்க பலாப்பழம் குடுக்காம அடிக்கிறாங்க என்று அழ உடனே தற்கொலை முயற்சியை கை விட்டு அப்பாவுக்காகவே வாழ்ந்தவர்.     அப்பா காக்கிநாடா University ல்...

Lockdown 2019

       என்ன பாக்குறீங்க 2020க்கு பதிலா 19னு போட்டுட்டேன் னா.இல்லீங்க 19தான் என்ன தலகீழா மாத்திச்சு.ஆமா திடீர்னு மார்பகப் புற்றுநோய் னு மருத்துவர் சொ ல்ல மூஞ்சி தொங்கிபோச்சு  எ னக்கு. படிச்சவங்க தானே  எப்படி  ஏமாந்தீங்கனு கேள் வி. அழுதேன்.90%இது  வெ ற்றி வா ய்ப்பு. 10%ல நான்   இருந்தா  குறுக்கு   புத்தி எனக் கு இல்லல்லயோசிக்க   வேணா ம். பாப்போம்னு பயிற்சி  மருத்துவரா இருந்த   என் மகனுக்கு சொன்னே ன்.இருமா வர்றே ன்.ஒற்றைப்பதில்.வந்தபின்ன சொன் னது.இதெல்லாம் ஒண்ணும் இல்லமா   என்ன ஒ ரு ஏழு மாச ம் கஷ்டப்படணும்.அவ்ளோதான்.அம்பது வயசு ல இதப் பொறுத்துக்க மாட்டியா னு கேட்டான்.      அடுத்த இரண்டு நாட்கள் எல்லா டெஸ்டும் எடுத்து biopsy காக வெய்ட் பண்ணி ஆபரேஷனுக்கு தேதி குறிச்சாங்க.எல்லோரும் அழுகை ஆனால் நான் திடமாக இருந்தேன்.யாரையுமே பாக்கலை என் வலி என் வலிமைனு.psychiatrist வந்தார் கள்.நாளைக்கு இந்நேரம் நீங்க கேன்ஸர் ஃப்ரீ.அப்புறம் கீமோ கொஞ்சம் கஷ்டம்னு நான் சிரித்தேன் தெரியும் முடி போய்டும் தோல் கருப்பாயி...

நண்பர்கள் கூட்டம்

     சும்மா ஒரு கதை தோணுச்சு.கதயோட ஒன்றி அப்டியே காட்சிக்குள்ள போறது உங்க பொறுப்பு.  காக்கி பேண்ட் வெள்ளை சட்டையோட பசங்க ப்ளூ பாவாடை வெள்ள சட்டையோட கொஞ்சம் பொண்ணுங்க.  எட்டாம் வகுப்பு ஆ பிரிவு னு வெச்சுக்குவோம்.நல்ல நண்பர்கள் அனைவரும் கேலி கிண்டல் இருந்தாலும் ஒருவர் மேல் ஒருவர் உண்மையான அக்கறை.இதில் நண்பன் ர எல்லோருக்கும் நல்ல பழக்கம்.உயிர்நண்பர்கள் மூன்று பேர் செ ரா மற்றும்  ர.  பக்கத்து வகுப்பு மாணவன் ப நம்ம எல்லாம் ஒரே வகுப்பு தானே ஒன்றா இருக்கலாம் எனக்கூப்பிட சரி இருக்கலாம் னு கொஞ்ச நாள் கூட்டு சேர்ந்தோம்.ஆனா அங்க ஒரே கும்மாளம் இங்க பிடிக்கல புகஞ்சிட்டே இருக்க நண்பன் ர கீதை பத்தி சொல்ல மதத்த பத்தி பேசாதனு சொல்லிட்டு அங்க மொக்கையா பஜன போட்ட பொண்ணுக்கு ஆஹா ஓஹோ என்று விடாம கை தட்ட எரிச்சல் ஆயிட்டு உயரமான சா அங்கே போய் கொளுத்தி போட துடுக்கு பொண்ணு நு நேரா அங்க போய் என்னது இது ஓவரா scene அப்டீனு நாலு வார்த்தை கேட்டுட்டு தனியா போய் நின்னுட்டா. நண்பன் ர கு ஏற்கெனவே செம கடுப்பு கீதை நான் சொன்னா தப்பு பஜன மட்டும் சரியானு வெளியே வந்தாச்சு .எதையுமே நிதானமா பண...