Posts

தேவனே

    சின்ன வயசுல இருந்தே ரொம்ப மனசு ஒடஞ்சு போகும் போது சோர்ந்து போகாதே மனமே கண்டுனை அழைத்த தேவன் கைவிடுவாரோ சோர்ந்து போகாதே என்று என்னை நானே தேத்துறது வழக்கம்.ஏனோ தெரியல யேசுவின் கருணை முகம் ரொம்ப பிடிக்கும்.ஒரு கவலையான முகம் அவரோடது கண்கள் கவலையும் கருணையும் கலந்து இருக்கும்.ரெண்டு நாள்ல அவர் பிறக்கிறார் எல்லா பண்டிகைகளும் Happy னு சொன்னா Christmas மட்டும் merry Christmas மிகவும் அழகான வார்த்தை.        Merry diwali ,merry Ramzan illa only merry Christmas ⛄🌲. கிறிஸ்துவிற்கு பின் 2021 ஆண்டுகள் முடிந்து 2022 ஆரம்பிக்கிறது பாப்போம் நல்லவிதமாக.

இடதுகை

Image
     ரொம்ப நாளா எழுதணும்னு நினைக்கிறது ஆனா ஏனோ ஆர்வம் குறைந்து விட்டது.இன்று கையெழுத்து போடும் போது தான் இடதுகையை எதேச்சையா கவனிச்சேன்.ரெண்டு வருஷத்துக்கு முன்ன எத்தனை எத்தனை ஊசிகள் அத்தனையும் இடதுகை தாங்கிச்சே அதுவரைக்கும் இந்த கைக்கு அவ்ளோ முக்கியத்துவம் கொடுத்தது இல்லை.அப்போ அப்போ வாட்ச் கட்டியிருந்ததால மணி பார்ப்பேன்.ஆனா இப்போ விரல் நரம்புகளக்கூட விடாம குத்தி குத்தி .நிறமெல்லாம் மாறி  வாட்ச் காட்டுனா கைல பலமில்லாம தூக்கக்கூட முடியாது.புற்று நோய விட அதற்குண்டான treatment ஆள் நிலைகுலைய செஞ்சுடுது.ஆனா நீயா நானா னு ஒரு கை பாத்துட்டதால இன்னைக்கு மறுபடியும் கம்பீரமாக வாட்சோட வலம் வரலாம்.         

மகளிர் தினத்தில்

      மகளிர் தினத்தில் யாரைப் பற்றி எழுதலாம் னு யோசிச்சப்போ பாட்டியின் ஞாபகம் வந்தது . அப்பாவின் அம்மா சர்வர்பீபீ.எனக்கு அஞ்சு வயசு இருக்கும் போதே போயிட்டார்.அப்போ அவருக்கு வயசு 87. அம்மா சொல்லி கேள்வி ஞானம் தான்.மாமியார் பற்றி குறைகள் இருந்தாலும் அவர் தைரியத்தை சொல்லி எங்களை வளர்த்தார் அம்மா.ஆஜானுபாகுவான உடல் கணீரென்ற குரல் யாருக்கும் எதற்கும் பயப்படாத பெண்மணி.அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் நான் வெள்ளைக்காரனையே செருப்பால் அடிச்ச ஏட்டோட பொண்ணு யாருக்கும் பயப்பட மாட்டேன் என்று.பழமொழிகள் ஆயிரம்.எழுதியிருந்தா புத்தகமா போட்டிருக்கலாம் என்று அம்மா அடிக்கடி சொல்லுவாங்க.       பாட்டியின் அண்ணன் ஏமாற்றி சொத்தெல்லாம் வாங்கி கொண்டதால் படிப்புதான் முக்கியம் என்று தன் பெண் குழந்தைகளை படிக்க வைத்தார்.அப்பா பத்தாவது குழந்தை பாட்டிக்கு.ஒரு சமயம் மனம் நொந்து தூக்கில் தொங்கப்போக மூன்று வயது என் அப்பா காலைக் கட்டிக் கொண்டு அண்ணாங்க பலாப்பழம் குடுக்காம அடிக்கிறாங்க என்று அழ உடனே தற்கொலை முயற்சியை கை விட்டு அப்பாவுக்காகவே வாழ்ந்தவர்.     அப்பா காக்கிநாடா University ல்...

Lockdown 2019

       என்ன பாக்குறீங்க 2020க்கு பதிலா 19னு போட்டுட்டேன் னா.இல்லீங்க 19தான் என்ன தலகீழா மாத்திச்சு.ஆமா திடீர்னு மார்பகப் புற்றுநோய் னு மருத்துவர் சொ ல்ல மூஞ்சி தொங்கிபோச்சு  எ னக்கு. படிச்சவங்க தானே  எப்படி  ஏமாந்தீங்கனு கேள் வி. அழுதேன்.90%இது  வெ ற்றி வா ய்ப்பு. 10%ல நான்   இருந்தா  குறுக்கு   புத்தி எனக் கு இல்லல்லயோசிக்க   வேணா ம். பாப்போம்னு பயிற்சி  மருத்துவரா இருந்த   என் மகனுக்கு சொன்னே ன்.இருமா வர்றே ன்.ஒற்றைப்பதில்.வந்தபின்ன சொன் னது.இதெல்லாம் ஒண்ணும் இல்லமா   என்ன ஒ ரு ஏழு மாச ம் கஷ்டப்படணும்.அவ்ளோதான்.அம்பது வயசு ல இதப் பொறுத்துக்க மாட்டியா னு கேட்டான்.      அடுத்த இரண்டு நாட்கள் எல்லா டெஸ்டும் எடுத்து biopsy காக வெய்ட் பண்ணி ஆபரேஷனுக்கு தேதி குறிச்சாங்க.எல்லோரும் அழுகை ஆனால் நான் திடமாக இருந்தேன்.யாரையுமே பாக்கலை என் வலி என் வலிமைனு.psychiatrist வந்தார் கள்.நாளைக்கு இந்நேரம் நீங்க கேன்ஸர் ஃப்ரீ.அப்புறம் கீமோ கொஞ்சம் கஷ்டம்னு நான் சிரித்தேன் தெரியும் முடி போய்டும் தோல் கருப்பாயி...

நண்பர்கள் கூட்டம்

     சும்மா ஒரு கதை தோணுச்சு.கதயோட ஒன்றி அப்டியே காட்சிக்குள்ள போறது உங்க பொறுப்பு.  காக்கி பேண்ட் வெள்ளை சட்டையோட பசங்க ப்ளூ பாவாடை வெள்ள சட்டையோட கொஞ்சம் பொண்ணுங்க.  எட்டாம் வகுப்பு ஆ பிரிவு னு வெச்சுக்குவோம்.நல்ல நண்பர்கள் அனைவரும் கேலி கிண்டல் இருந்தாலும் ஒருவர் மேல் ஒருவர் உண்மையான அக்கறை.இதில் நண்பன் ர எல்லோருக்கும் நல்ல பழக்கம்.உயிர்நண்பர்கள் மூன்று பேர் செ ரா மற்றும்  ர.  பக்கத்து வகுப்பு மாணவன் ப நம்ம எல்லாம் ஒரே வகுப்பு தானே ஒன்றா இருக்கலாம் எனக்கூப்பிட சரி இருக்கலாம் னு கொஞ்ச நாள் கூட்டு சேர்ந்தோம்.ஆனா அங்க ஒரே கும்மாளம் இங்க பிடிக்கல புகஞ்சிட்டே இருக்க நண்பன் ர கீதை பத்தி சொல்ல மதத்த பத்தி பேசாதனு சொல்லிட்டு அங்க மொக்கையா பஜன போட்ட பொண்ணுக்கு ஆஹா ஓஹோ என்று விடாம கை தட்ட எரிச்சல் ஆயிட்டு உயரமான சா அங்கே போய் கொளுத்தி போட துடுக்கு பொண்ணு நு நேரா அங்க போய் என்னது இது ஓவரா scene அப்டீனு நாலு வார்த்தை கேட்டுட்டு தனியா போய் நின்னுட்டா. நண்பன் ர கு ஏற்கெனவே செம கடுப்பு கீதை நான் சொன்னா தப்பு பஜன மட்டும் சரியானு வெளியே வந்தாச்சு .எதையுமே நிதானமா பண...

மூக்கு

    மத்தவங்க விஷயத்தில மூக்க நுழைக்காத இது ரொம்ப முக்கியமான விஷயம்.இந்த கட்டுரை கொஞ்சம் பெரிய மூக்கு இருக்கறத பத்தி பெருமையா சொல்றதால சின்ன மூக்கு இருக்கிறவங்க படிக்காதீங்க சும்மா ஒரு ஜாலிக்குதான் மத்தபடி ஒண்ணுமில்லை .என்னைக்கு உருப்படியா எழுதறேன்னு கேக்கறீங்களா.😰    சரி விஷயத்துக்கு வருவோம்.எனக்கு பெரிய மூக்கு இருக்கறது கொஞ்சம் பெருமை நானா நினைச்சிக்கிட்டேன் பெரிய மூக்கு இருக்கிறவங்க அறிவாளிங்கனு😃 சின்ன வயசுல இந்திராகாந்தி மூக்கு னு எனக்கு சொல்லும்போது ஆஹா. அண்ணாக்கும் எனக்கும் ஒரே மாதிரி மூக்கு அவரோட பசங்க ரெண்டு பேரும் அதே.         Cooptex ல தீபாவளிக்கு வாங்கிட்டு form fill பண்ணும்போது பின்னாடி நின்னவங்க city corporation school sheik Mohammed தங்கச்சியா நீங்கனு கேட்டாங்க ஆச்சரியமா எப்படி கண்டுபிடிச்சீங்கனு கேட்டேன் மூக்கு வெச்சு தான் னு அசால்ட்டா சொன்னாங்க🙃         சின்ன வயசுல சப்பையாதான் இருந்தது எப்படி மாறுச்சுன்னே தெரியல.எங்க பெரியப்பா மகன் எப்ப என்ன பாத்தாலும் மூக்கு பிடிச்சு இழுப்பார்.பெரியவளானதும் நான் இழுத்து தான் ...

2020

    கொரோனா மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இந்த ஆண்டு பிறந்த குழந்தைகள் நடந்த திருமணங்கள் எல்லாமே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்திருக்கும்.எல்லாமே ஒரு கண்ணுக்கு தெரியாத கிருமியினால் மாறிவிட்டது.இதோ டிசம்பர் மாதமும் வந்தாச்சு.    முகமூடிகள் அணிந்து சுற்றிய நம்மை முகக்கவசத்துடன் சுற்ற வைத்தது.பிரமாண்டங்கள் எல்லாம் எங்கே போயின என்றே தெரியவில்லை.நீ நல்லா இருக்கியா நான் நல்லா இருக்கேன்னு விசு பாணி விசாரணைகள்.கை குலுக்கல் நின்று இரு கை கூப்பி வணக்கம் சொல்லி.     இயற்கை என்ன சொல்ல வருகிறது என்று இன்று வரை தெரியவில்லை .கொரோனா இருக்கா இல்லையா என்று கூட தெரியாமல் தான் இருக்கிறோம்.தகரத்தட்டிகள் இப்போ மறைந்து விட்டன.இயற்கைப்பேரழிவுகள் எத்தனையோ வந்தும் நாம் மாறவில்லை. இன்று வெகுசில மாற்றங்களை பார்க்க முடிகிறது.ரோட்டில் யாரும் அவ்வளவா எச்சில் துப்புறதில்லை.இன்னைக்கு சந்தோஷமா இருந்தா போதும் பொய் சொல்றது தெரிந்தாலும் சரி சரி விடுங்க என்றும் போக முடிகிறது.அரசியல் கழிவுகள் பற்றி பேச விரும்பவில்லை.     மாணவர்கள் வகுப்பில் செய்த தொந்தரவு ஆன்லைனில் இல்...