Posts

உறவுகள்

   உறவுகள் எவ்ளோ உண்மையா இருக்க முடியும். சில நேரத்தில எல்லாருமே பொய்யா தெரிவாங்க விலகியே இருப்போம்.சில நேரத்தில அவங்க தான் முக்கியமா தெரிவாங்க நாமளா தேடிப்போவோம்.மனுஷ மனசு இருக்கே நிஜம்மாவே குரங்குதாங்க.காலைலதான் நினைப்பேன் இவங்க கிட்ட இனிமே பேச்சுவார்த்தை வெச்சுக்கவே கூடாது னு  ஆனா ஒரு போன் கால் போதும் அப்படியே மாறி பேச ஆரம்பிச்சுடுவேன்.யார் முதல்ல அதுலதான் இருக்கு சூட்சுமம்.             பணத்தில சொத்துல பாசத்துல ஏமாத்தின உறவுகள் கிட்ட மறுபடி பேச முடியுமா தெரியல ஆனா காலம் சேக்கணும்னு நினைச்சா தன்னால கொண்டு சேத்துடும்.இல்லைனா சாகுற வரை பேச்சே இல்லாமல் போகும்.உண்மையான உறவுகள்னா அம்மா அப்பா தவிர குழந்தைகள் கணவன் இல்லைனா மனைவி அப்புறமா தாத்தா பாட்டி அக்கா தம்பி அண்ணா தங்கச்சி ஆனாலும் இவை கிடைக்கவும் வரம் வேண்டும்.சகோதர உறவு சொத்து இல்லைனா அருமை சொத்து தகராறில் சாகிற வரை முகத்த திருப்பி போன உறவுகள் நிறைய.      உறவுகள் ஒரு வினோதமான உறவு.நல்லா இருந்தா அவனா என்றும் ஏதாவது ஒண்ணு நடந்துடுச்சுன்னா நான் இருக்கிறேன் தைரியமா இருன்னும்.அப்பவ...

ரோஜாவா நான்

 World 🌹 day   இரண்டு வருடங்களுக்கு முன் இந்த நாளில் ஒரு டாக்டரை கூப்பிட்டு awareness program நடத்திய ஆள் தான் நான். plastic னால cancer வரும்னு college canteen ல் plastic tumbler  ஒழித்ததில் என்னுடைய பங்களிப்பு மிக முக்கியமானது.ஆனால் என்னவோ தெரியவில்லை எனக்கு அந்த big C விழிப்புணர்வு இல்லாமல் போனது. சென்ற வருட அனுபவம் எழுதணும் தனியா.இப்போ கொஞ்சம் மட்டும்.படித்த முட்டாள கேள்விப்பட்டு இருப்பீங்க.அது இதோ இங்கே அட  நாந்தான்.doctor , படிச்சவங்க நீங்க எப்படீங்க ஏமாந்தீங்கனு கேட்டப்போதான் எவ்ளோ முட்டாளா இருந்துட்டேன்னு வருத்தமா இருந்தது அழுதேன்..இத எழுதறது படிக்கறவங்க கவனமா இருக்கணும் னு தான்.       Google is not a doctor.இங்கதான் ஏமாந்தேன்.google ல சொன்ன big C யோட 14symptoms ல எதுவுமே எனக்கு இல்லை.medical doubts மட்டும் google பண்ணி பாக்க வேணாம் தயவுசெய்து.தயக்கம்தான் Dr கிட்ட போக அப்புறம் நமக்கு என்ன கெட்ட பழக்கம் இருக்கு வர்றதுக்கு னு எண்ணம்.சின்னதா இருக்கும் போது பார்த்தா சிரமங்கள் இல்லை. வருமுன் காப்போம்.இல்லனா கஷ்டம்தான்.திடீரென்று ஒரு நாள் எல்லாம் மாற...

மகள்

       எனக்கு நல்ல அம்மா அப்பா அவங்கள பத்தி சொல்லியிருக்கேன்.இன்னும் நிறைய சொல்லணும்.ஆனா நான் நல்ல மகளா இருந்திருக்கேனா.இன்னைக்குதாங்க தோணுச்சு.Am I a good daughter அம்மா அப்பா கிட்ட கேட்டதில்லை.இப்போ கேக்கலாம் னா ரெண்டு பேரும் இல்லை. சுய பரிசோதனை நிறைய கேள்விகள் ஓடுது காலைலேருந்து.நிஜமா பதிலே இல்லை.எனக்கு மார்க் போட்டா just pass தான் வந்தது.        அம்மா அப்பா இருந்து இருந்தா கண்டிப்பா நெறய போட்டிருப்பாங்க. எவ்ளோ பிடிவாதம் சட்டுனு கோபம் பிடிக்கலன்ன மூஞ்சிய காமிக்கறது அழறதுனு சொல்லிட்டே போலாம்.அப்பா திட்டியதும் இல்லை என்னை விட்டுக்கொடுத்ததும் இல்லை.நான் sister ஆ போறேன் னு அப்பா கிட்ட சொன்னதும் எதுவும் சொல்லாமல் சரிமா என்று எப்படி சொல்ல முடியும்.அவர் மனம்  கஷ்டப்படும் னு எனக்கு ஏன் தோணல.அவருக்காக நான் செய்தது BE படிச்சது எனக்கு ஒரு advice சொன்னார்.first class வாங்கிடுமானு அது செஞ்சேன்.என் அப்பாவின் தலை நிமிர்ந்து இருக்கணும்னா என் தலை குனிந்து இருக்கணும்னு எப்பவுமே எனக்கு தோணிட்டே இருக்கும்.இது ஒண்ணுதான் நல்ல மகளா என்னை எடுத்துக்கலாம்.   ...

பயணங்கள்

     யாருக்கு தான் ஆசை இல்லை ஊர்சுற்ற எத்தனை வாகனங்கள் பஸ் கார் ரயில் விமானம்.இன்னும் மோட்டார் சைக்கிள் ஆட்டோ மாட்டுவண்டி குதிரை வண்டி.         கொரோனா வந்த பின் எல்லோருக்கும் எங்காவது வெளியே போனா போதும் போல் ஆகிவிட்டது.எனக்கு ஒரே வண்டியில் போறது போர்.மாத்தி மாத்தி போக பிடிக்கும்.அதுலயும் கேரளா ஜீப்பில் போறது ரொம்ப இஷ்டம். ரொம்ப தூரமா போறதுக்கு ரயில விட எது நல்லா இருக்க முடியும். இப்போ விமானங்கள் வந்தாச்சு ஆனாலும் ஜிக்குபுக்கு ரயில் மாதிரி வருமா.நேத்துகூட என் அக்கா மகன் கிட்ட பேசும் போது சொன்னான் எனக்கு AC ல போகப்பிடிக்காது . வெளியே வேடிக்கை பாக்காம சுத்த போர்.எனக்கும் அப்படித்தான் ஆனால் இப்போ எல்லாம்  ரொம்ப தொந்தரவாக இருக்கு second class ல்.        குதிரை வண்டிக்கு வருவோம்.பத்தாவது தருமபுரியில் படித்த போது குதிரை வண்டியில் தான் போவேன்.பின்னால் கால் தொங்கப்போட்டு பசும்புல் மேல் ஜமக்காளம் போட்டு புல் வாசனையோடு ஆஹா அந்தப் பயணம் போல் வருமா. ஒரு சொடுக்கு போட பறக்கும் வண்டி காரெல்லாம் எம்மாத்திரம்.ஹோ ஹோவெ...

அழுக்கு

    திரைப்படம் அவ்வளவா பார்ப்பதில்லை.review பார்த்து நாலு பேர் நல்லா இருக்கு னு சொன்ன பின்னர் போறதுக்குள்ள படத்த எடுத்துடுவாங்க கடைசியாக கஜினிகாந்த் பார்த்த ஞாபகம்.நான் பாப்கார்ன் காக போற ஆள்.இப்போ அதுவும் டேஸ்ட் இல்லை.இப்போ தியேட்டரும் திறந்து இல்லை.     அமேசான் ல பொன்மகள் வந்தாள் பார்த்தேன்.ரெண்டு நாளாக மனசு சரியில்லை. பெண்குழந்தைகள் வன்கொடுமை . என்ன சொல்ல பணக்கார பையன்கள் திமிரெடுத்து அலைவதையும் அதை அப்பாக்கள் support செய்வதையும் எடுத்திருக்கிறார்கள்.ஆனால் இதில் shoot at sight . நிஜத்தில் இப்படி நடப்பதில்லை ‌.இதைவிட மோசம் . ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளை நல்லபடியா வளர்க்க எவ்ளோ கஷ்டப்படுகிறார்கள் அதையும் தாண்டி இப்படி ஆங்காங்கே நடந்து விடுகிறது.எல்லாவற்றிற்கும் போதை தான் ஆதிமூலம்.ஒரு வீடியோ பார்த்தேன்.பூனை கஞ்சா இலை சாப்பிட்டு தலைகீழாக ரெண்டு கால்ல நடந்து போகுது.       நான் சிறுவயதில் எவ்ளோ சுதந்திரமா வளர்ந்தேன்.பொற்காலம்னே சொல்லலாம்.கிருஷ்ணா திருத்தணியில் அவர்தான் எல்லாம் ஷு போட்டு விட்டு சைக்கிள் பாரில் டவல் போட்டு என்னை உட்கார வைத்து school...

சமையலுக்கு ஆள்

     என் பேர் பாத்துட்டு நல்லா சமைப்பேன்னு நினைச்சா பாதி ஆமாம் பாதி இல்லை.லைட்டர்னு வந்த பின்னதான் அடுப்பு பத்த வெச்சேன்.chemistry labla bunsen burner பத்த வைக்க பக்கத்தில் கெஞ்சின ஆளு நான்.       ஏனோ சமைக்க இஷ்டப்படவே இல்லை. டீ போடக்கூட தெரியாது.கல்யாணம் நிச்சயமான பின்ன மாமியாரும் நாத்தனாரும் திடீர்னு வீட்டுக்கு வர அம்மா வெளியே போயிருந்தார்.யோசிச்சு பாத்து பால் சூடு பண்ணி horlicks போட்டுக்குடுத்தேன்.😄கூட்டுக்குடும்பம்கறதால😄 மாமியார் என்னை எடுபிடி வேலைக்குத்தான் வைத்து கொண்டார்.எனக்கும் ஜாலி.   அஞ்சு வருஷம் கழிச்சு தனிக்குடித்தனம்.அப்போல்லாம் ஃபோனும் இல்லை அம்மாகிட்டே கேட்டு சமைக்க.பையனை ஏழரை மணிக்கு அனுப்பணும் அப்புறம் நானும் அவரும் வேலைக்குப் போகணும் ‌.எப்படியோ சமையல் பழகிட்டேன்.      வீட்ல அவருக்கும் எனக்கும் சண்டை வந்து அப்புறம் agreement வெளியே கடைக்கு போற வேல அவரோடது சமையல் நான் மேல் வேலைக்கு ஆள்.முடியாத பட்சத்தில் ஹோட்டல்.அப்போ அப்போ எங்கம்மா சமைச்சா நல்லாருக்கும் னு கமெண்ட் வரும்.அது அப்படியே மருவி நம்ம வீட்டு சமையல் மாதிரி வேற...

வலிகள்

  நான் எழுதலாம்னு முடிவு செஞ்சப்போ என் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை மட்டுமே எழுதணும் சோகங்களையும் சிரிக்கிற மாதிரி தான் எழுதணும்னு முடிவு பண்ணேன்.      ஏனோ தெரியலை ரொம்பவே என்னை ஆட்டிப்படைக்குது.கொரோனா ஒரு பக்கம் னா சாத்தான்குளம் கொலைகள் ,தள்ளுவண்டி பெண், அல்வாக்கடை அதிபர் தற்கொலை ,நெய்வேலி விபத்து என்ன நடக்குதுன்னே தெரியல.    ஒரே நேரத்தில் எல்லாமே சரியாகக்கூடாதான்னு மனசு ஏங்குது.போன வாரம் பேரூர் குளம் பாக்கலாம் னு போனோம்.விதவிதமா பறவைங்க போர்ட்ல தான் வரைஞ்சிருக்கு ஒண்ணும் காணோம்.என்னப்பாக்கப்பிடிக்கல போல.உக்கடம் மீன் மார்க்கெட் வழியாகத்தான் போனோம்.எல்லோரும் வரிசையில் மூங்கில் கம்புகள் கட்டி நன்றாகவே இருந்தது.கொரோனாவைக் கண்டு பயப்படாதீர்கள்.     பூமார்க்கெட் ரோட்டில் முழுசுமே பூக்கள் வாசனை அப்படி இழுக்கும்.இப்போ ரோட்டோரம் முழுதும் நகரம் அடித்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதினு பார்த்தாலே மனசுல ஒரு வலி.     புது பஸ் ஸ்டாண்டில் ஒரு ஊட்டி பஸ் இல்லை. எவ்ளோ கூட்டம் நிக்கும்.மனசு சரியில்லை னு தான் வெளியே போனேன்.ஆனா இன்னும் பாரமாயிடு...